search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்"

    குரூப் 1 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். #TNPSCExam #Group1ExamIrregularities
    சென்னை:

    சென்னையில் இன்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    நேற்று வெளியான குரூப் 4 தேர்வு முடிவில் 15 லட்சம் பேர் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஒருங்கிணைந்த தேர்வால் அரசுக்கு 12 கோடி ரூபாய் செலவு குறைக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஆன்லைன் வழியாக நடைபெறும். அக்டோபர் மாத இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும்.



    கடந்த 2016 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தேர்வு முறையில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுகிறது. தேர்வு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்படுகிறது. 2016ல் நடந்த தேர்வையும், 2017ல் நடந்த தேர்வையும் ஒன்றாக சேர்த்து பார்க்கக்கூடாது.

    டிஎன்பிஸ்சியில் காலிப் பணியிடங்கள் 11280 ஆக அதிகரித்துள்ளது. அதிக அளவில் தேர்வர்கள் பங்கேற்றால் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. 50 ஆயிரம் முதல் 60 ஆயிரத்துக்குள் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் தேர்வு நடத்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #TNPSCExam #Group1ExamIrregularities
    ×